Search This Blog

Thursday, June 16, 2016

தமிழ் இலக்கிய வரலாறு வினா விடை - 4

தமிழ் இலக்கிய வரலாறு வினா விடை - 4


76.தமிழ்க் கவிஞருள் அரசர் என வீரமாமுனிவர் யாரைக் குறிப்பிடுகின்றார்?

திருத்தக்கதேவரை

77. சூடாமணி நிகண்டின் ஆசிரியர் யார்?

மண்டலபுருடர்

78.மாதேவடிகள் எனப்படுபவர் யார்?

சேக்கிழார்

79.முகையதீன் புராணம் பாடியவர் யார்?

வண்ணக்களஞ்சியப்புலவர்

80.மந்திர மாலை என்ற நூலின் ஆசிரியர் யார்?

தத்துவபோதகசுவாமிகள்

81.தாமரைத் தடாகம் என்ற நூல் யாரால் எழுதப்பட்டது?

கால்டுவெல்ஐயர்

82.அசோமுகி நாடகம் எழுதியவர் யார்?

அருணாசலகவி

83.முன்கிரின்மாலை எழுதியவர் யார்?

நயினா முகம்மது புலவர்

84.தமிழ்நாவலர் சரிதம் எழுதியவர் யார்?

கனக சுந்தரம் பிள்ளை

85.ராஜி என்ற நாவலின் ஆசிரியர் யார்?

எஸ். வையாபுரிப்பிள்ளை

86.விநோதரச மஞ்சரி என்ற நூல் எழுதியவர் யார்?

அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்

87.பவளமல்லிகை யார் எழுதிய சிறுகதை?

கி.வா.ஜகந்நாதன்

88.இடைச்சங்கம் இருந்த இடம் எது?

கபாடபுரம்

89.குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல்கள் எத்தனை?

400

90.சேர மன்னர்களை மட்டுமே பாடும் சங்ககால நூல் எது?

பதிற்றுப்பத்து

91 மன்னன் உயிர்த்தேமலர் தலை உலகம் என்று கூறும் நூல் எது?

புறநானூறு

92. உரை வீச்சு என்ற நூலின் ஆசிரியர் யார்?

சாலை இளந்திரையன்

93.மண்குடிசை யார் எழுதிய நாவல்?

மு.வரதராசன்

94.கன்னற் சுவை தரும் தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி என்று பாடியவர் யார்?

பாரதிதாசன்

95.மனம் ஒரு குரங்கு யார் எழுதிய நாடகம்?

சோ

96.தேன்மழை யாருடைய கவிதைத் தொகுப்பு?

சுரதா

97.திண்டிம் சாஸ்திரி யார் எழுதிய சிறுகதை?

பாரதியார்

98.ஒரு புளிய மரத்தின் கதை யார் எழுதியது?

சுந்தர ராமசாமி

99.உலக மொழிகள் என்ற நூலை எழுதியவர் யார்?

.அகஸ்தியலிங்கம்

100.பண்டைத் தமிழ் எழுத்துக்கள் என்ற தலைப்பில் நூல் எழுதியவர்?

நா.சுப்பிரமணியன்




தொகுப்பு :-

சத்யாசெந்தில்,
தமிழ் ஆசிரியை,                                                                                    சோலார் மெட்ரிக் பள்ளி,                                                                   
ரோஷனை,                                                                                         
திண்டிவனம் - 604 001.                                                                   
விழுப்புரம் மாவட்டம்,  தமிழ்நாடு - இந்தியா.

1 comment: