தமிழ் இலக்கிய வரலாறு வினா விடை - 2
26.கவிராட்சசன் என அழைக்கப்படுபவர் யார்
ஒட்டக்கூத்தர்
27.பெண்மதிமாலை என்ற நூலை எழுதியவர் யார்
வேதநாயகம்பிள்ளை
28.உவமைக்கவிஞர் எனப் போற்றப்படுவர் யார்
சுரதா
29.கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர் என்ன
முத்தையா
30.சீதக்காதி என வழங்கப்படுபவர் யார்
செய்து காதர்மரைக்காயர்
31.தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை என்று பாடியவர் யார்
பாரதிதாசன்
32.மானவிஜயம் என்ற நூலின் ஆசிரியர் யார்
பரிதிமாற்கலைஞர்
33.காதல் எங்கே என்ற நாடகம் எழுதியவர் யார்
மு.வரதராசன்
34.மலைபடுகடாம் என்ற நூலின் வேறு பெயர் என்ன
கூத்தராற்றுப்படை
35.தமிழ்நாட்டின் மாப்பஸான் என அழைக்கப்படுபவர் யார்
புதுமைப்பித்தன்
36.கரிசல் காட்டில் ஒரு சம்சாரி யார் எழுதிய நூல்
கி.ராஜநாராயணன்
37.பாண்டியன் பரிசு யார் படைப்பு
பாரதிதாசன்
38.புதையல் என்ற புதினத்தின் ஆசிரியர் யார்
கலைஞர் கருணாநிதி
39.சந்தக்கவிமணி எனப் பட்டம் பெற்ற கவிஞர் யார்
கவிஞர் தமிழழகன்
40.ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் யார்
சவ்வாதுபுலவர்
41.மனுமுறை கண்டவாசகம் என்ற உரைநடை நூலை எழுதியவர் யார்
வள்ளலார்(இராமலிங்கஅடிகள்)
42. இலக்கிய உதயம் என்ற நூலின் ஆசிரியர் யார்
எஸ்.வையாபுரிப்பிள்ளை
43. மீரா இவரின் முழுப்பெயர் என்ன
மீ.ராஜேந்திரன்
44.அசோகன் காதலி என்ற நாவலை எழுதியவர் யார்
அரு.ராமநாதன்
45.பெரியபுராண உட்பிரிவுப் பெயர் என்ன
சருக்கம்
46.திராவிட வேதம் என அழைக்கப்படுவது எது
திருவாய்மொழி
47.நாடக்காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது
சிலப்பதிகாரம்
48.சின்னூல் எனப்பெயர் பெற்ற நூல் எது
நேமிநாதம்
49.புறப்பொருள் வெண்பாமாலை இயற்றியவர் யார்
ஐயனாரிதனார்
50.தண்டியலங்காரம் எழுதிய ஆசிரியர் பெயர் என்ன
தண்டி
தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
தமிழ் ஆசிரியை, சோலார் மெட்ரிக் பள்ளி,
ரோஷனை,
திண்டிவனம் - 604 001.
விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு - இந்தியா.
No comments:
Post a Comment