தமிழ் இலக்கிய வரலாறு வினா விடை - 3
51.சிற்றிலக்கியங்களுக்கான வேறு பெயர் என்ன?
பிரபந்தங்கள்
52. பரணி நூல் எத்தனை உறுப்புகளைக் கொண்டது?
13 உறுப்புகள்
53.உரையாசிரியர் எனப்படுபவர் யார்?
இளம்பூரணர்
54. ஈட்டிஎழுபது என்ற நூலைப் பாடியவர் யார்?
ஒட்டக்கூத்தர்
55. நெடுநல்வாடை ஆசிரியர் யார்?
நக்கீர்
56.ஓடாப்பூட்கை உறத்தை எனக்கூறும் நூல் எது?
சிறுபாணாற்றுப்படை
57. தாண்டகவேந்தர் எனப்படுபவர் யார்?
திருநாவுக்கரசர்
58. திருவாசகம் எத்தனைப்பாடல்களைக் கொண்டது?
658 பாடல்களைக் கொண்டது
59.சுகுணசுந்தரி என்ற நாவல் யாரால் இயற்றப்பட்டது?
வேதநாயகம்பிள்ளை
60.மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று கூறியவர் யார்?
கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை
61.இலக்கியம் என்ற பெயரில் இதழ் நடத்தியவர் யார்?
சுரதா
62.கறுப்பு மலர்கள் யாருடைய படைப்பு?
நா.காமராசன்
63.பத்மாவதி சரித்திரம் எழுதியவர் யார்?
மாதவய்யா
64.தேசபக்தன் கந்தன் என்னும் நாவலை எழுதியவர் யார்?
கே.எஸ்.
வேங்கடரமணி
65. ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே என்று பாடியவர் யார்?
பொன்முடியார்
66.திருத்தி எழுதிய தீர்ப்புகள் என்ற கவிதை நூலின் ஆசிரியர் யார்?
வைரமுத்து
67.திருப்புகழ் பாடியவர் யார்?
அருணகிரிநாதர்
68. குட்டித் திருவாசகம் என அழைக்கப்படும் நூல் எது?
திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
69.சதாவதானம் என அழைக்கப்படும் இஸ்லாமிய புலவர் யார்?
செய்குதம்பிப் பாவலர்
70. இராபர்ட்-டி-நோபிலி எப்பொழுது தமிழகம் வந்தார்?
17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
71.தேம்பாவணி காப்பியம் யாரால் எழுதப் பெற்றது?
வீரமாமுனிவர்
72.இலக்கண உலகின் ஏக சக்கரவர்த்தி எனப்படுவர் யார்?
பாணினி
73.பரிபாடல் அடி வரையறை யாது?
25 முதல் 400 அடிவரை
74.வஞ்சி நெடும்பாட்டு என அழைக்கப்படும் நூல் எது?
பட்டினப்பாலை
75.சடகோபன் என அழைக்கப்பட்ட ஆழ்வார் யார்?
நம்மாழ்வார்
தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
தமிழ் ஆசிரியை, சோலார் மெட்ரிக் பள்ளி,
ரோஷனை,
திண்டிவனம் - 604 001.
விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு - இந்தியா.
No comments:
Post a Comment