Search This Blog

Wednesday, November 28, 2012

தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்...




சாகித்திய அகாதமி விருது (Sahitya Akademi Award), சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.




சாகித்ய அகாதமி இந்திய அரசினால், மார்ச் 12, 1954 இல் துவக்கப்பட்ட ஓர் அமைப்பு. இந்திய மொழிகளில் இலக்கியமும் இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் எண்ணத்தோடு துவக்கப்பட்ட அமைப்பு, சாகித்ய அகாதமி. இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களும், பயிற்சி முகாம்களும் மற்ற பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்தியுள்ளது சாகித்ய அகாதமி.

இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது, சிறந்த படைப்புகளை விருது அளித்து ஊக்கப்படுத்துவது போன்ற பல பணிகளை செய்வது சாகித்ய அகாதமி.



பரிசுத் தொகை:-

சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட நூலினை எழுதிய நூலாசிரியருக்கு முதன் முதலாக 1955 ஆம் ஆண்டில் ரூபாய் 5, 000 வழங்கப்பட்டது. பின்னர் 1983 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 10,000 வழங்கப்பட்டது. அதன் பிறகு 1988 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 25,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 40, 000 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் 2003 ஆம் ஆண்டில் ரூபாய் 50, 000 ஆக அதிகரிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 1,00,000 ஆக வழங்கப்பட்டு வருகிறது.


தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்:

ஆண்டு -    படைப்பு (தன்மை) -      படைப்பின் எழுத்தாளர்

    1955 - தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) - ரா. பி. சேதுப்பிள்ளை
    1956 - அலை ஓசை (நாவல்) - கல்கி கிருஷ்ணமூர்த்தி
    1957 - (விருது வழங்கப்பட வில்லை)
    1958 - சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை) - சி. ராஜகோபாலச்சாரி
    1959 - (விருது வழங்கப்பட வில்லை)
    1960 - (விருது வழங்கப்பட வில்லை)
    1961 - அகல் விளக்கு (நாவல்) - மு.வரதராசனார்
    1962 - அக்கரைச்சீமையிலே  (பயண நூல்) - சோமு (மீ. . சோமசுந்தரம்)
    1963 - வேங்கையின் மைந்தன் (நாவல்) - அகிலன் (பி. வி. அகிலாண்டம்)
    1964 - (விருது வழங்கப்பட வில்லை)
    1965 - ஸ்ரீ ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) - பி. ஸ்ரீ ஆச்சார்யா
    1966 - வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு) - . பொ. சிவஞானம்
    1967 - வீரர் உலகம் (இலக்கிய விமர்சனம்) - கி. வா. ஜகன்னாதன்
    1968 - வெள்ளைப் பறவை (கவிதை) - . சீனிவாச ராகவன்
    1969 - பிசிராந்தையார் (நாடகம்) - பாரதிதாசன்
    1970 - அன்பளிப்பு (சிறுகதைகள்) - கு. அழகிரிசாமி
    1971 - சமுதாய வீதி (நாவல்) - நா. பார்த்தசாரதி
    1972 - சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) - ஜெயகாந்தன்
    1973 - வேருக்கு நீர் (நாவல்) - ராஜம் கிருஷ்ணன்
    1974 - திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - கே. டி. திருநாவுக்கரசு
    1975 - தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) - ஆர். தண்டாயுதம்
    1976 - (விருது வழங்கப்பட வில்லை)
    1977 - குருதிப்புனல் (நாவல்) - இந்திரா பார்த்தசாரதி
    1978 - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (விமர்சனம்) - வல்லிக்கண்ணன்
    1979 - சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) - தி. ஜானகிராமன்
    1980 - சேரமான் காதலி (நாவல்) - கண்ணதாசன்
    1981 - புதிய உரைநடை (விமர்சனம்) - மா. ராமலிங்கம்
    1982 - மணிக்கொடி காலம் (இலக்கிய வரலாறு) - பி. எஸ். ராமையா
    1983 - பாரதி : காலமும் கருத்தும் (இலக்கிய விமர்சனம்) - தொ. மு. சிதம்பர ரகுநாதன்
    1984 - ஒரு காவிரியைப் போல - லட்சுமி திரிபுரசுந்தரி
    1985 - கம்பன் : புதிய பார்வை (இலக்கிய விமர்சனம்) - . . ஞானசம்பந்தன்
    1986 - இலக்கியத்துகாக ஒரு இயக்கம் (இலக்கிய விமர்சனம்) - . நா. சுப்பிரமணியம்
    1987 - முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) - ஆதவன்
    1988 - வாழும் வள்ளுவம் (இலக்கிய விமர்சனம்) - வா. செ. குழந்தைசாமி
    1989 - சிந்தாநதி (சுயசரிதக் கட்டுரைகள்) - லா. . ராமாமிர்தம்
    1990 - வேரில் பழுத்த பலா (நாவல்) - சு. சமுத்திரம்
    1991 - கோபல்ல கிராமத்து மக்கள் (நாவல்) - கி. ராஜநாராயணன்
    1992 - குற்றாலக் குறிஞ்சி (வரலாற்று நாவல்) - கோவி. மணிசேகரன்
    1993 - காதுகள் (நாவல்) - எம். வி. வெங்கட்ராம்
    1994 - புதிய தரிசனங்கள் (நாவல்) - பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்)
    1995 - வானம் வசப்படும் (நாவல்) - பிரபஞ்சன்
    1996- அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) - அசோகமித்ரன்
    1997 - சாய்வு நாற்காலி (நாவல்) - தோப்பில் முகமது மீரான்
    1998 - விசாரணைக் கமிஷன் (நாவல்) - . கந்தசாமி
    1999 - ஆலாபனை (கவிதைகள்) - அப்துல் ரகுமான்
    2000 - விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் (விமர்சனம்) - தி. . சிவசங்கரன்
    2001 - சுதந்திர தாகம் (நாவல்) - சி. சு. செல்லப்பா
    2002 - ஒரு கிராமத்து நதி (கவிதைகள்) - சிற்பி பாலசுப்ரமணியம்
    2003 - கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்) - வைரமுத்து
    2004 - வணக்கம் வள்ளுவா (கவிதைகள்) - ஈரோடு தமிழன்பன்
    2005 - கல்மரம் (நாவல்) - ஜி. திலகவதி
    2006 - ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதைகள்) - மு.மேத்தா
    2007 - இலையுதிர் காலம் (நாவல்) - நீல. பத்மநாபன்
    2008 - மின்சாரப்பூ (சிறுகதைகள்) - மேலாண்மை பொன்னுசாமி
    2009 - கையொப்பம் (கவிதைகள் (மொழிபெயர்ப்பு) - புவியரசு
    2010 - சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) - நாஞ்சில் நாடன்
    2011 - காவல் கோட்டம் (நாவல்) - சு. வெங்கடேசன்




தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி,
மயிலம்  தமிழ்க்கல்லூரி
                        மயிலம் - 604 304.
                      
விழுப்புரம் மாவட்டம்,  
                      
தமிழ்நாடு - இந்தியா.

No comments:

Post a Comment