தமிழ் இலக்கியத்தில் ஆச்சிரியமான - அதிசியமான செய்திகள்!
v
கரிகால் பெருவளத்தான் என்ற சோழமன்னன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டை ஆண்டான். இமயம் வரை சென்று அங்கே புலிக்கொடி பொறித்தான். ஒரு நாள் அவனது அவைக்கு ஒரு வழக்கு வந்தது. கரிகாலன் இளம் வயதில் பட்டம் ஏற்றவன். வழக்கை விசாரிக்கும் மன்னன் ஒரு இளைஞன் என்பதைக் கண்ட வாதிக்கும், பிரதிவாதிக்கும் முகம் கோணியது. இந்தச் சிறுவனா இந்தச் சிக்கலான வழக்கைத் தீர்க்கப் போகிறான் என்று எண்ணித் தயங்கினர். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரிந்ததைக் கண்ட கரிகாலன், அவர்களை மறுநாள் வரும்படி பணித்தான். மறுநாள், தானே நரைமுடி தரித்தான். ஒரு முதியவர் போல வேடமணிந்து வந்து அமர்ந்தான். ஒரு முதியவரை வழக்கை விசாரிக்க அனுப்பியிருக்கிறான் என்று கருதிய வாதியும், பிரதிவாதியும் அவர்களுடைய வழக்கை வாதப் பிரதிவாதங்களுடன் எடுத்துரைத்தனர். இருவரும் ஏற்கும் அருமையான தீர்ப்பை வழங்கினான் முதியவர் வேடத்தில் வந்த அந்த நரைமுடிச் சோழன். இது பழைய கதை. இச்செய்தி பொருநராற்றுப்படை, மணிமேகலை, பழமொழி ஆகிய நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இதில் என்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா? இன்றும் கூட பிரிட்டனில் கோர்ட்டுகளில் நீதிபதிகள் வெள்ளை நிறத் தலைமுடியை அணிந்து தான் தீர்ப்புக் கூறுகிறார்கள். கரிகாலன் தோற்றுவித்த நரைமுடி வழக்கம் பிரிட்டன் வரை பரவியது எப்படி? ஆராய்ச்சிக்குரிய விஷயம்!
v
புறநானூற்றுப் பாடல் ஒன்று, காலையில் பாலில் அரிசிப்பொரியைச் சேர்த்து உண்பதாகக் குறிப்பிடுகிறது. இன்று பிரிட்டனிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் வாழும் மக்கள் காலை உணவில் “கோர்ன் ஃப்ளேக்ஸ்” (மக்காச் சோளம்) “ரைஸ் கிரிஸ்பிஸ்” (அரிசிப் பொரி) ஆகியவற்றைச் சாப்பிடுவதைக் காண்கிறோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழன் கண்டு பிடித்த காலை தானிய உணவு (Breakfast Cereal) உலகெங்கிலும் பரவியது எப்படி? இது ஆராய்ச்சிக்குரிய பொருள்!
v
கம்பராமாயணத்தில் ஒரு பாடல் வருகிறது. அதில் இளநீரை ஓட்டையுள்ள ஒரு காம்பைக்கொண்டு உறிஞ்சிக் குடித்ததாக ஒரு செய்யுள் வருகிறது. இன்று மேலை உலகில் பர்கர் கிங், மக்டோனல்டு போன்ற உணவகங்களில் கோக் அல்லது பழச்சாறு வாங்கினால் கூடவே ஸ்ட்ராவும் (Straw) தருகிறார்கள். குளிர்பானங்களை “ஸ்டிரா” வைத்து உறிஞ்சிக் குடிக்கும் வழக்கத்தைத் தமிழன் தான் உலகிற்குக் கற்பித்தானோ! இது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.
v
சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான கலித்தொகையில் ஒரு அதிசயச் செய்தி வருகிறது, பாலை பாடிய பெருங்கடுக்கோ இயற்றிய பாடலில், ஒரு மரத்தின் கீழ் பொய் சொல்பவன் நின்றால் அந்த மாம் வாடிவிடும் என்று கூறுகிறார். தற்காலத்தில் அமெரிக்காவில் பொய் கண்டுபிடிக்கும் கருவியைப் (Lie Detector)பயன்படுத்துகின்றனர். பொய் சொல்பவனின் நாடி, இருதயம் மூளை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கிட்டு அவன் பொய்யன் என்பதைக் கண்டுபிடிக்கின்றனர். ஆனால் தமிழனோ இதற்கும் ஒருபடி மேலாகச் சென்று ஒரு தாவரம் கூட பொய்யைக் கண்டுபிடிக்க உதவும் என்கிறான். ஆனால் அத்தகைய மரம் எது என்று தெரியவில்லை. வள்ளுவர் கூட ‘மோப்பக் குழையும் அனிச்சம்’ என்று அனிச்சம்பூ பற்றிக் கூறுகிறார். அதாவது முகர்ந்து பார்த்தாலேயே வாடிவிடுமாம் அனிச்சம். தாவரங்களுக்கும் உயிருண்டு, உணர்ச்சியுண்டு என்பதை 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்தவன் தமிழன். இன்னொரு சங்கப்பாடலில் ஒரு செடியை நெய்யும் பாலும் ஊற்றிப் பெற்ற மகளைப் போல அன்பாக வளர்த்த ஒரு பெண் பற்றி ஒரு கவிஞன் பாடுகிறான்.
v
விண்வெளியில் ஏராளமான கிரகங்கள் உள்ளன. அவைகளில் பூமியைப் போலக் காற்று மண்டலம் இருந்தால் தான் உயிரினங்கள் வாழ முடியும். பூமிக்கு மேலே விண்வெளியில்---காற்று மண்டலம் (Atmosphere) இல்லை. இதைப் பழந்தமிழர் அறிந்திருந்தனர் போலும்! வெள்ளைக்குடி நாகனார் என்ற புறநானூற்றுப் புலவர் (புறம் 35) ‘வளியிடை வழங்கா வானம்’ என்று குறிப்பிடுகிறார். குறுங்கோழியூர்க் கிழார் (புறம் 20) ‘வறிது நிலை இல் காயம்’ என்றும் புலவர் மார்க்கண்டேயனார் (புறம் 365) ‘வளியிடை வழங்கா வழக்கு அரு நீத்தம்’ என்றும் வள்ளுவன் (குறள் 245) ‘வளி வழங்கு பூமி’ என்றும் இதையே குறிப்பிடுகின்றனர்.
v
ஒலியும் ஒளியும் (Sound & Light) மின் காந்தப்பட்டையின் (Electro Magnetic Spectrum) ஒரே அங்கம் என்று தற்கால அறிவியல் கூறுகிறது. இதை அறிந்து தானோ என்னவோ தமிழ்மொழியில் மட்டும் ஒலி-ஒளி என்று ஏறத்தாழ ஒரே சப்தமுள்ள இரண்டு சொற்கள் இதைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. சமஸ்கிருதம், ஆங்கிலம் உள்பட எல்லா மொழிகளிலும் இதற்கு வெவ்வேறு சப்தமுள்ள சொற்கள் உள்ளன.
v
தற்காலப் பறவையியல் அறிஞர்கள் பறவைகள் குடியேற்றம் (Bird Migration)பற்றி விரிவாக ஆராய்ந்து வருகின்றனர். சிலவகைப்பறவைகள் 12,000 மைல் பறந்து வடதுருவத்திலிருந்து தென் துருவம் வரை சென்று திரும்புகின்றன. இதைக்கண்டு பிடிக்க நவீன உத்திகளைக் (Electronic Tagging or Ringing) கையாளுகின்றனர். பறவைகளின் காலில் தேதியும், ஊர்ப்பெயரும் பொறித்த ஒரு அலுமினிய வளையத்தையோ, மின்னணுக் கருவியையோ மாட்டிவிடுவார்கள். வேறொரு நாட்டில் இத்தகைய பறவைகளைக் கண்டால் அந்த வளையத்திலுள்ள செய்திகளையும் அதைத் தாங்கள் பார்த்த தேதி, இடத்தின் பெயரையும் அந்த நாட்டுப் பறவையியல் அறிஞர்கள் உலகமுழுவதுமுள்ள பறவையியல் ஆய்வுக்கூடங்களுக்கு அறிவிப்பார்கள். ஆனால் 2,000 ஆண்டுக்கு முன்னரே தென்குமரியிலிருந்து வட இமயத்திற்கு அன்னப்பறவைகள் பறந்து செல்வதையும் இமயமலையிலிருந்து அவை தமிழ்நாட்டுக்கு வருவதையும் தமிழன் அறிந்து வைத்துள்ளான். காலில் வளையம் மாட்டாமலும் மின்னனுக்கருவியைப் பயன்படுத்தாமலும் 3,000 மைல் பயணத்தை அறிந்து பாடியுள்ளான் தமிழன்.
புறம் 67—பிசிராந்தையார், நற்றிணை—70 வெள்ளி வீதியார், நற்றிணை 356---பரணர், அகம் 120---நக்கீரனார், அகம் 273---ஒளவையார் ஆகிய பாடல்கள் காண்க.)
v
பிராணிகளுக்கு அறிவு உண்டு என்றும் மனிதர்களைப் போலவே அவைகளுக்கு உணர்வுகள் உண்டு என்றும் தற்காலத்தில் ஏராளமான கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியாகி வருகின்றன. குரங்குகள் மனிதர்களைப் போலவே கருவிகளைப் பயன்படுத்துகின்றன என்று பிரபல வார இதழான ‘நியூஸ் வீக்’கில் அண்மைக்காலத்தில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. ஆனால் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டான் தமிழன். குரங்குகள் முரசு (Drums) அடிப்பதை முட மோசியார் (புறம் 128) என்பவரும் குரங்குகள் குச்சிகளைப் பயன்படுத்துவதைக் கபிலர் என்பவரும் (ஐங்குறுநூறு 275—277) குறிப்பிடுகின்றனர். ஆடுகளைக் கொட்டிகையில் அடைப்பதற்கு ஆட்டிடையர்கள் நாய்களைப் பயன்படுத்தும் காட்சியை பி.பி.சி. டெலிவிஷனில் பலரும் பார்த்திருப்பீர்கள். தொலைவில் நின்றவாறே வாயின் மூலம் ‘விசில்’ அடித்து ஆடுகளை அழைக்கும் காட்சியை கபிலர் (அகம் 318) பாடுகிறார். பாரியின் பறம்பு மலையை மூவேந்தரும் முற்றுகையிட்ட காலத்துக் கிளிகளின் மூலம் நெல் முதலிய தானியங்களைக் கொணர்ந்து பல மாதங்கள் உயிர் வாழ்ந்தனர் என்று (Survival techniques and using animals at war time) ஒளவையாரும் (அகம் 303) நக்கீரரும் (அகம் 78) குறிப்பிடுகின்றனர். கிளிகளை இவ்வாறு பயன்படுத்தியவர் கபிலர் என்றும் கூறுகின்றனர்.
v
பருவக்காற்றின் பயனை ஹிப்பாலஸ் என்ற கிரேக்கர் தான் முதல் முதலில் கண்டுபிடித்தார் என்றும் இது கி.பி. முதல் நூற்றாண்டில் நிகழ்ந்தது என்றும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இது சரியல்ல என்றே தோன்றுகிறது. ஏனெனில் கரிகால் பெருவளத்தானைப் பாடிய வெண்ணிக்குயத்தியர் (புறம் 66) கரிகால் வளவனின் மு ன்னோர்கள் காற்றின் பயனை அறிந்து நாவாய் (கப்பல்) ஓட்டியதைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ. (புறம் 66)
மாங்குடி மருதனும் (புறம் 26) மருதன் இளநாகனும் (கலி82) வளிவழங்கு கலம் (பாய் மரக்கப்பல்) பருவக்காற்று ஆகியன பற்றிப் பாடுகின்றன்னர்.
v
தமிழ் இலக்கியத்தில் ஏராளமான அதிசயச் செய்திகள் உள்ளன. அத்தனையும் எழுத இடம் போதா. இதில் ஆர்வமுடையோருக்குக் கீழ்க்கண்ட பட்டியல் உதவும்.
v
AERODYNAMICS விமானம், பைலட் இல்லாத விமானம் –புறம் 27 (முதுகண்ணன் சாத்தனார்)
v
ZOOLOGY ஒரு நாள் மட்டுமே உயிர் வாழும் ஈசல்—புறம் 51 (ஐயூர் முடவனார்)
v BOTONY பூ வாது காய்க்கும் மரம் (FICUS) புறம் 58(காரிக்கண்ணனார்) மலைபடு 268
vMEDICINE நெல்லிக்கனி உண்டால் ஆயுள் நீடிக்கும் –புறம் 91 (ஒளவையார்)அகம் 271(காரிக்கண்ணனார்)
v STATISTICS பரம்பு மலை வட்டாரத்தில் மட்டும் 300 ஊர்கள்--- புறம் 11 (கபிலர்)
v WINE நிலத்தில் புதைத்து மதுவைப் பக்குவப்படுத்தல் புறம் 120 (கபிலர்)
v
ANIMAL BEHAVIOUR வலப்பக்கம் விழுந்த உணவை மட்டுமே புலி உண்ணும். இடப்பக்கத்தில் விழுந்தால் சாப்பிடாது. அகம் 252, 238, 3, புறம் 190, அகம் 29, நற்றிணை 154, அகம் 357, 389.
v AGRICULTURE கரும்பு பயிரிட்ட வரலாறு—புறம் 99, புறம் 392 (ஒளவையார்)
v
ASTRONOMY சனி, சுக்கிரன், வால் நட்சத்திரம் பற்றிய குறிப்பு---புறம் 117 (கபிலர்)
v GENEOLOGY மன்னனின் 49 தலைமுறை ----புறம் 201 (கபிலர்)
vTHOUGHT POWER எண்ணங்களுக்கு அற்புத சக்தி உண்டு----புறம் 217 (பொத்தியார்)
vWEATHER/METEROLOGY வறட்சிக்கும் மழைக்கும் வெள்ளி கிரகம் காரணம்---புறம் 383, 384, 386,388, 389 பதி 24
vZOOLOGY ஆமையின் பார்ப்புகள் (குட்டிகள்) தாயின் முகத்தைப் பார்த்துக்கொண்டே வளரும். குறந் 135, நற் 152
v
HELIOTROPISM நெருஞ்சி மலர் சூரியன் செல்லும் திசை எல்லாம் திரும்பும்—புறம் 155, குறு 202, 315, கலி 53, அகம் 336
v POPULATION/STATISTICS குறுந்தொகை
44
v MUSIC இசைக்கு மிருகங்கள் மயங்கும்—அகம் 88
v DRUM SIGNAL செய்தி அனுப்புவதற்கு முரசுகளைப் பயன்படுத்தல்—குறுந் 390
v ZOOLOGY முதலைகள் குட்டிகளைக்கொன்று தின்னும். நண்டுகள் பிறந்தவுடன் தாய் இறக்கும்.—ஐங்குறு 24 (ஓரம்போகி)
vASTRONOMYவிண்கல் (METEOR) விழுந்து பயிர்கள் சேதம்—குறு 150, 189, 356, நற்றி 393
v WASHING துணிகளுக்குக் கஞ்சிப் (STARCH)பசை போடுதல்—குறு 330, நற் 90, மதுரை 721, நெடுநல் 134, அகம் 387
v CARPENTRY ஒரே நாளில் எட்டுத்தேர்கள் செய்தல்—புறம் 87 (ஒளவை)
v
PSYCHOLOGY பிராணிகளும் கனவு காணும் –நற் 87, பதி11, அகம் 132, 170, 141, குறிஞ்சிக்கலி 13
v METALLURGY கொல்லன் பட்டறை, வெள்ளி, செம்பு, தங்கம் எடுத்தல்---நற் 125, 133, 153, 124, 313, புறம் 69, ஐங் 24
v SEX குரங்குகளுக்கும் கூடப் புணர்ச்சிக்குப் பின் வெட்கம் வரும். –நற் 151
v SCISSORS மயிர் குறை கருவி--- பொரு 29, பால்லைக்கலி 31, 35
vTEXTILE இழை போன இடம் தெரியாத ஆடை—பொரு 82, (துணி நெய்தல், மெல்லிய ஆடை பற்றி ஏராளமான குறிப்புகள் உண்டு)
v CLOCK குறுநீர்க்கன்னல் (HOUR
GLASS)----முல்லை 57, அகம் 43
v
EMPLOYING FOREIGNERS
படைகளில் வெளிநாட்டினர் (MERCERNERIES),
சேவை—முல்லை 61, 66
vBIG BANG THEORY பிரபஞ்சம் தோன்றியது எப்படி? --பெரும் 1—3, (நச்சி, உரை காண்க) மதுரை 266
v ZOOLOGY புறாக்கள் கற்களை உண்ணும்—பட்டி 58, கலி 56, அகம் 271
v MEDICINE காயங்களைத் தைத்தல்—பதி 42 (பரணர்)
v MISSILES எந்திர அம்பு, விசை வில்----பதி 53, 22
v MARINE ENGINEERING கப்பல் செப்பனிடல்---பதிற்று 76
v BIOLOGY உயிரினங்களை வகைப்பிரித்தல் (ஓரறிவு முதல் ஆறறிவு வரை)—தொல்காப்பியம் மரபியல் 27, 34
v NOISE POLLUTION பறை ஒலி (TOO MUCH NOISE WILL KILL) கேட்டால் இறக்கும். அசுணமா—கலி 143
v WATER PURIFICATION நீர் தெளிய தேற்றாவின் விதை—கலி 142
v LIGHT HOUSE கலங்கரை விளக்கம்---சிலம்பு 6 -141, நற் 279
v MEDICINE மருத்துவக் குறிப்புகள் - எண்ணிலடங்கா
v ASTROLOGY ஜோதிடம், புள் நிமித்தம், சகுனம் குறிபார்த்தல்ல் பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. (சங்க இலக்கியத்தில் ஏறத்தாழ 90 சோதிடக்குறிப்புகள் உள்ளன.)
தொகுப்பு :-
சத்யாசெந்தில்,
தமிழ் ஆசிரியை,
சோலார் மெட்ரிக் பள்ளி,
ரோஷனை,
திண்டிவனம் - 604 001.
விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு - இந்தியா.
No comments:
Post a Comment