பாரத ரத்னா அப்துல்கலாம் காலமானார்...
முன்னாள்
குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் ( வயது 84 ) மேகாலயாவில் காலமானார். தீவிர
சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
மேகாலயாவில்
கருத்தரங்கில் பங்கேற்றபோது தீடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கி
விழுந்தார். உடனே, ஜில்லாங்கில் உள்ள பெதானி மருத்துவமனையின் தீவிர
சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை
அளித்தும் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
இந்தியாவின்
11வது குடியரசுத்தலைவராக இருந்தவர் கலாம். 2002 ம் ஆண்டு முதல் 2007ம்
ஆண்டு வரை இந்தியாவின் குடியரசுதலைவராக இருந்தார்.
84 வயதாகும் அப்துல்கலாம், 1931- ம் ஆண்டில் ராமேஸ்வரத்தில் பிறந்தவர். இவர் இந்திய ஏவுகணையின் தந்தை என்று புகழப்படுகிறார்.
அக்டோபர்
15,1931ல் பிறந்த இவர், ஜீலை 27, 2015ல் மறைந்தார். பொதுவாக டாக்டர்
ஏபிஜே அப்துல் கலாம், என்று குறிப்பிடப்படுகிறார். இந்தியாவின் 11 ஆவது
குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார்.
கலாம் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார்.
திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ்
தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.
ஜனாதிபதியாக
பதவி ஏற்குமுன், அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு
நிறுவனத்திலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், விண்வெளி
பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப
வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று
பிரபலமாக அறியப்படுகிறார்.
1974
ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த
போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும்
அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார்.
கலாம்,
இந்தியாவின் முக்கிய கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாரதிய
ஜனதா கட்சியின் ஆதரவுடன், 2002 ஆம் ஆண்டில் லட்சுமி சாகலை தோற்கடித்து,
இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தற்போது, பாட்னா
, அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களில் ஒரு வருகைப்
பேராசிரியர் ஆகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல்
மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் ஆகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே
எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆகவும் பணியாற்றுவதோடு,
சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை/வருகைப்
பேராசிரியர் ஆகவும் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.
கலாம்
தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற
திட்டங்களை முன்மொழிந்துள்ளார். தென் கொரியாவில் அவருடைய புத்தகங்கள்,
மொழிபெயர்ப்பு பிரதிகளாக மாற்றுவதற்காக பெரும் வரவேற்பைப்
பெற்றிருக்கின்றன. அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல
மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான
பேச்சுக்களாலும், இந்திய மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடல்களாலும் பெரிதும்
அறியப்படுகிறார். அவர் 2011 ஆம் ஆண்டில் தேச இளைஞர்களுக்காக, இந்தியாவில்
ஊழலை ஒழிப்பதை மையக் கருவாகக் கொண்டு, "நான் என்ன தர முடியும்" என்ற
இயக்கத்தை ஆரம்பித்தார்.
ஐக்கிய
நாடுகள் அவையில் ஏபிஜே அப்துல் கலாமின் 79 ஆவது பிறந்த நாள் உலக மாணவர்
தினமாக அறிவிக்கப்பட்டது. அவர் 40 பல்கலைக்கழகங்களில் இருந்து கெளரவ
டாக்டரேட் பட்டங்களைப் பெற்றுள்ளார் . இந்திய அரசு கலாம் அவர்கள் இந்திய
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும்
மேம்பாட்டு நிறுவனத்தில் சிறப்பாக பணியற்றியமைக்கும், அரசின் விஞ்ஞான
ஆலோசகராக பணியற்றியமைக்கும், 1981 ஆம் ஆண்டில்,பத்ம பூஷண் விருதையும் ,
1990 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதையும் கொடுத்துக் கௌரவித்தது.
இந்தியாவின்
மிக உயரிய விருதான பாரத ரத்னா-வை , விஞ்ஞான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு
தொழில்நுட்பம் நவீனமயமாக்கலில் அவரின் மகத்தான மற்றும் மதிப்புமிக்க
பங்களிப்புக்காக பெற்றார்.
தொகுப்பு :-
சத்யாசெந்தில்,தமிழ் ஆசிரியை,சோலார் மெட்ரிக் பள்ளி,ரோஷனை,திண்டிவனம் - 604 001.விழுப்புரம் மாவட்டம்,தமிழ்நாடு - இந்தியா.
No comments:
Post a Comment